பெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
6/27/2016 2:52:35 PM
ஊத்துக்கோட்டை: எருக்குவாய் கிராமத்தில் நடைபெற்ற செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பெரியபாளையம் அருகே எருக்குவாய் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 24ம் தேதி முதல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.நேற்று முன்தினம் 2ம் கால யாகபூஜையும், மாலையில் 3ம்கால யாகசாலை பூஜையும் நடந்தது. இதைத் தொடர்ந்து, யாகசாலையில் இருந்து புனிதநீர் நேற்று காலை எடுத்து வரப்பட்டு, கோயில் கோபுரத்தில் உள்ள கும்பத்தில் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.இந்த கும்பாபிஷேக விழாவில் பெரியபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.