காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா துவக்கம் இன்று திருக்கல்யாண உற்சவம்
6/18/2016 12:13:34 PM
காரைக்கால்: சிவபெருமானின் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். காரைக்காலில் உள்ள இவரது கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மாங்கனித் திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை(பரமதத்த செட்டியார்) ஊர்வலம் நடந்தது. இன்று(18ம் தேதி) காலை புனிதவதியார்(காரைக்கால் அம்மையார்) தீர்த்தக்கரைக்கு வருதலும், பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்திற்கு வருதலும், காரைக்கால் அம்மையாருக்கும் பரம தத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.நாளை பிச்சாண்டவர்(பரமசிவன்) மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது. பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து வீதியுலா நடக்கிறது. அப்போது பக்தர்கள் வீட்டு வாசல், மாடிகளில் இருந்து மாங்கனிகளை வாரி இறைத்து வேண்டுதலை நிைறவேற்றுவர்.