புனித அந்தோணியார் தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
6/14/2016 2:22:49 PM
சின்னசேலம்சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூரில் நடந்த புனித அந்தோணியார் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூரில் பழமைவாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரம் கொடியேற்றப்பட்டு, இரண்டாவது வாரம் பெரிய தேர்பவனி வருவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதையொட்டி கோயிலில் தினமும் திருப்பலிகளும், ஜெபவழிபாடுகளும் நடந்து வந்தது. நேற்று இரவு 8மணியளவில் மாவட்ட பேராயர் ஆனந்தராயர் தலைமையில் புனித அந்தோணியார் கோயிலில் இருந்து பெரிய தேர்பவனி வந்தது. இதில், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நாகர்கோவில், நாகை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.