திருவள்ளூர் ஞானசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
6/11/2016 12:51:16 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் ஞான வித்யாலயா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் உள்ள ஞானசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இப்பள்ளி வளாகத்தில் ஞானசித்தி விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், தட்சணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி, ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர், பக்த ஆஞ்சநேயர் மற்றும் நவகிரகங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழாவையொட்டி, 7ம் தேதி காலை கணபதி ஹோமமும், லட்சுமி பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 8ம் தேதி 2ம் கால யாக பூஜை, மாலை 3ம் கால யாக பூஜை நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் காலை புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில், பள்ளி நிர்வாகி ஏ.லாலு உட்பட அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.