பொன்னேரி அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
6/10/2016 2:35:17 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த அகரம் கிராமத்தில் எல்லை அம்மன் கோயில் உள்ளது. இங்கு எல்லையம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், சிந்தாள ஈஸ்வரி அம்மன், நவகிரக கோஷ பரிவார தெய்வங்கள் ஆகிய சன்னதிகள் உள்ளன. இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை, கோ பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.நேற்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பொன்னேரி, அகரம், பழவேற்காடு, திருப்பாலைவனம், பூங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அப்போது, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.