ரமலான் நோன்பு தொடங்கியது
6/6/2016 2:44:05 PM
தக்கலை: முஸ்லிம் மக்களின் முக்கிய பண்டிகையான ரமலான் மாத நோன்பு நேற்றிரவில் இருந்து தொடங்கியது.இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது முக்கிய கடமைகளில் ஒன்றாக உள்ளது. இஸ்லாமியர்கள் ரமலான் பிறையை பார்த்து நோன்பு தொடங்குகின்றனர். ஷவ்வால் பிறையை பார்த்து ேநான்பை முடித்து ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்தாண்டு ரமலான் மாத நோன்பு நேற்று இரவு தராவீஹ் தொழுகையுடன் நடந்தது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே வடக்கஞ்சேரியில் ரமலான் பிறை தென்பட்டதாக குமரி மாவட்ட ஜமாத் உலமா சபையின் பிறை கமிட்டி அறிவித்துள்ளது.நோன்பு காலங்களில் பள்ளிவாசல்களில் ஐந்து நேர தொழுகை மட்டுமல்லாமல் தராவீஹ் தொழுகையும் நடத்தப்படுகிறது. இதில் குர்ஆனின் அனைத்து அத்தியாயங்களும் ஓதப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த காலங்களில் தான, தர்மங்களும் செய்யப்படுகின்றன. மாலை வேளைகளில் நோன்பு கஞ்சி வழங்கப்படும். ஒரு சில பள்ளிவாசல்களில் இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.