ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழா யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா நாளை மறுநாள் தேரோட்டம்
5/3/2016 2:31:03 PM
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ம் திருநாளில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனத்திலும், மூன்றாம் நாளில் மாலை நம்பெருமாள் யாளி வாகனத்திலும் எழுந்தருளி காட்சியளித்தார்.4ம் நாள் நம்பெருமாள் தங்கக் கருட வாகனத்திலும், 5ம் நாள் நம்பெருமாள் தங்க ஹனுமந்த வாகனத்தில் புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 6ம்நாளான நேற்று காலை நம்பெருமாள் தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நம்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி வந்ததை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இன்று (3ம் தேதி) மாலை நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுதினம் (5ம் தேதி) நடக்கிறது. நிறைவு நாளான 7ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.