பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா 6ம் தேதி கொடியேற்றம்
5/2/2016 2:17:50 PM
திருக்காட்டுப்பள்ளி: இந்தியாவில் உள்ள பிரசித்திபெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ பேராலயங்களில் பூண்டிமாதா தேவாலயமும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா மே 6ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறும். ஆண்டு விழாவை கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் னரும் 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு கொடியேற்றி துவக்கி வைக்கிறார்.பின்னர் ‘மரியாள் இரக்கத்தின் அன்னை’ என்ற தலைப்பில் மறையுரையாற்றி ஆசி வழங்குகிறார். தொடர்ந்து நவநாட்கள் திருப்பலி பூசைகள் நடைபெறும்.
14ம் தேதி மாலை 5.30 மணிக்கு பூண்டி மாதா பேராலயத்தின் முன்னாள் பங்கு தந்தை லூர்துசேவியர் சவரிராயனை ‘இறை அடியாராக’ தமிழக ஆயர் பேரவையும், ரோம் புனிதர் பட்டம் வழங்க ஓப்புதல் அளிக்கும் ஆணையமும் வழங்கிய அறிவிப்பை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி வெளியிடுகிறார்.இரவு 9 மணிக்கு மாதாவின் அலங்கார, ஆடம்பர தேர்பவனியை புனிதப்படுத்தி ஆயர் அந்தோணிசாமி துவக்கி வைக்கிறார். இரவு வாணவேடிக்கைகள் நடைபெறும். 15ம் தேதி காலை 6மணிக்கு ஆயர் தலைமையில் திருப்பலி பூஜையும், மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.