வெயிலுக்கு தொழிலாளி சாவு: பலி 16 ஆக உயர்வு
4/30/2018 2:23:25 PM
சித்தூர்: சித்தூர் மாவட்டம் நின்றா மண்டலம் எலக்காகுடி பஞ்சாயத்து மிட்டூர் பாபராஜ கண்ட்ரிகா கிராமத்தை சேர்ந்தவர் பாலய்யா(49), கட்டிட ெதாழிலாளி. இவர், நேற்று அதே கிராமத்தில் ஒரு வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டார். மதியம் வெயிலில் வேலை செய்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்டு நின்றா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பாலய்யா ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவர் அதிகளவு வெயில் தாங்க முடியாமல் இறந்துள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து நின்றா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சித்தூர் மாவட்டத்தில் தற்போது வரை வெயில் ெகாடுமையால் 16 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.