முதல்வர் பிறந்தநாள் விழா, பட்ஜெட் விளக்க கூட்டம் மடிப்பாக்கத்தில் 2500 பேருக்கு எவர்சில்வர் தூக்கு: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், முத்துசாமி, செந்தில்பாலாஜி வழங்கினர்
3/22/2023 5:52:56 PM
ஆலந்தூர்: சோழிங்நல்லூர் மேற்கு பகுதி திமுக சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 2,500 பேருக்கு எவர்சில்வர் தூக்கு வழங்கும் விழா மற்றும் அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மடிப்பாக்கம் பஸ் நிலைய மைதானத்தில் நடந்தது. பெருங்குடி மண்டல குழு தலைவரும் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி திமுக செயலாளாருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர்கள் ஜி.சுரேஷ், வி.ரஞ்சித்குமார், கவுன்சிலர் சமீனா செல்வம் முன்னிலை வகித்தனர். மடிப்பாக்கம் வி.விஸ்வநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், முத்துசாமி, செந்தில்பாலாஜி, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ ஆகியோர் 2500 பேருக்கு எவர்சில்வர் தூக்குகளை வழங்கி பேசினர். இதில் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ‘நிதி நிலை அறிக்கையில் பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வரலாற்று சிறப்புமிக்கது. காலத்திற்கும் நினைவில் இருக்கும் திட்டம். சைதாப்பேட்டையில் ரூ.621 கோடியில் 4 வழிச்சாலை மேம்பாலம், சைதாப்பேட்டை போக்குவரத்து நிலையம் புதுப்பிக்கவும், கண்ணகி நகர், பெரும்பக்கம் பகுதியில் உடற்பயிற்சி கூடம், மருத்துவமனை போன்றவை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார். கூட்டத்தில், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, காரப்பாக்கம் கணபதி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, மாவட்ட துணைச் செயலாளர்கள் மு.மனோகரன், த.விஸ்வநாதன், பாலவாக்கம் சோமு மற்றும் மடிப்பாக்கம் எம்.பி. அரிகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் அரிகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ஜே.கே.மணிகண்டன், ஷெர்லிஜெய், பள்ளிக்கரணை பாபு, ஷர்மிளா திவாகர், தமிழரசி சோமு மற்றும் ஆர்.ராமமூர்த்தி, ஆர்.ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் குமாரசாமி, தேவராஜ், ஜெ.திவாகர் மற்றும் சிந்தன், மார்க்ஸ், ரவீந்திரகுமார், காசி, ராஜேந்திரன், வினாயகம், விவேக், விமல்பிரகாஷ், ஈஸ்வரமூர்த்தி, அருண்குமார், ஜெயக்குமார், ரமேஷ்குமார், பி.எம்.தினேஷ் பாலாஜி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.