கல்வித் துறைக்கு மட்டும் 40 ஆயிரத்து 299 கோடி ஒதுக்கீடு வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பாராட்டு
3/22/2023 5:48:48 PM
சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன், தமிழக பட்ஜெட் குறித்து வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழகத்தில் வேற எந்த துறைக்கும் இல்லாமல் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் 40 ஆயிரத்து 299 கோடி ஒதுக்கி வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் ஆக இருக்கிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக பல்வேறு புதிய திட்டங்கள் அறிவித்து அதன் மூலம் சுமார் 50,000 இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் வெகுவாக கொண்டாடப்படுகிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, அனைத்து தொடக்கப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் உள்ளிட்டவை பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.