முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்தில் 1000 பேருக்கு உதவிகள்: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்
3/21/2023 5:55:09 PM
பெரியபாளையம்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், பெரியபாளையம் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமை வகித்தார். எஸ்.கோவிந்தராஜ், ஆர்.ஆறுமுகம், க.கணேஷ் ஆகியோர் வரவேற்று பேசினர். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஏ.தேவேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் டி.கே.முனிவேல், ஒன்றிய துணை செயலாளர்கள்ஆர்.உதயசூரியன், பி.ராஜேஸ்வரி, ஈ.உதயகுமார், ஒன்றிய பொருளாளர் கே.எஸ்.குப்பன், மாவட்ட பிரதிநிதிகள் கே.வி.வெங்கடாசலம், ஆர். தணிகாசலம், கே.கண்ணபிரான், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜே.வீரமணிகண்டன், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் ஆர்.ரஞ்சித், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர்கள் எஸ்.பிரேம்ராஜ், வி.கவி ராசன் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன், தலைமைக்கழக பேச்சாளரும் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கென்னடி ஆகியோர் கலந்து கொண்டு 1000 பெண்களுக்கு புடவை, 500 பேருக்கு பிரியாணி வழங்கினார். முன்னதாக ஆலப்பாக்கம், அத்திவாக்கம், கிளாம்பாக்கம், ஆகிய ஊராட்சிகளில் திமுக கொடியை ஏற்றிவைத்து ஆலப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில், துணை செயலாளர் கன்னிகை ஜி.ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரமிளா ஆறுமுகம், திருக்கண்டலம் மதன், நிர்வாகிகள் எம்.நித்தியானந்தம், பி.குமார், ஜி.செல்வராஜ், ஜி.தயாளன், எஸ்.பாஸ்கர், கே.பாபு, பி.கே.பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். காட்டையன் நன்றி கூறினார்.