ஒய்டு, நோ பாலுக்கும் டிஆர்எஸ்; ஆண்கள் ஐபிஎல் போட்டிகளுக்கும் 3.1.1 விதி அமல்: வீரர்கள் மகிழ்ச்சி
3/7/2023 6:08:18 PM
மும்பை: ஐபிஎல் தொடரில் நடுவர்கள் கொடுக்கும் தவறான முடிவுகள் வீரர்களுக்கு மட்டுமின்றி அணியின் வெற்றியையே பாதித்துவிடும். இதன் மூலம் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக சில அணிகளுக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுவதாக ரசிகர்கள் பகிரங்க குற்றச்சாட்டுகளையும் எழுப்பி வந்துள்ளனர்
இந்நிலையில் நடுவர்கள் தவறான முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் விதியை பயன்படுத்தி வீரர்கள் அவுட்டா அல்லது நாட் அவுட்டா என்று பார்க்கும் நடைமுறை ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் சிறப்பாக செயல்பட்டு வரும் விதி 3.1.1 ஆடவர் கிரிக்கெட்டிலும் செயல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதன்படி இனி கேப்டன்களோ அல்லது வீரர்களோ ஒய்டு பால் அல்லது நோ பால் கேட்டு நடுவரிடம் முறையீடு செய்யலாம். உதாரணத்திற்கு கடைசி ஓவரில் மூன்று பந்துகளுக்கு பத்து ரன்கள் தேவைப்படும், நிலையில் பந்துவீச்சாளர் ஒயிடோ அல்லது உயரமாக நோபால் போட்டு அதனை நடுவர் கண்டுகொள்ளாத நிலையில் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் டிஆர்எஸ் முடிவை பயன்படுத்தி நடுவரிடம் மேல் முறையீடு செய்யலாம்.
இதேபோன்று களத்தில் நிற்கும் கேப்டனும் வைடு அல்லது நோ பால் ஆகியவற்றை நடுவர் தவறாக கொடுத்தாலும் அதனை டிஆர்எஸ் பயன்படுத்தி மேல் முறையீடு செய்யலாம். ஒரு வேலை நடுவர் சொன்னது தான் சரி என டிஆர்எஸ் முடிவில் தெரியவந்தால் இனி அந்த வாய்ப்பை வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதன் மூலம் பெரிய தவறுகள் தடுக்கப்படும் நிலை உருவாகும். போட்டிகளை சரியான முறையில் நடத்த தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்படும் இந்த முடிவை வீரர்களும், ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்.