வடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா
6/24/2019 3:13:37 PM
கீழ்ப்பாக்கம்: சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் சிறப்பு மருத்துவ மனையில் உலக பாலியல் ஆராய்ச்சி மையம், சர்க்கரை நோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் உள்ளது. இங்கு உலக ஆண்கள் தின வார விழா கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்பட்டது. விழாவை தொடங்கிவைத்து மருத்துவமனை இயக்குநனர் டாக்டர் காம்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயராணி காமராஜ் முன்னிலை வகித்தார்.
டாக்டர் காமராஜ் பேசியதாவது: இந்தியாவில் திருமண உறவு முறிவுகள் நாளுக்குநாள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆண்மை எழுச்சி அவசியம். உடலில் சீராக ரத்த ஓட்டம் நடைபெற வேண்டும். ஹார்மோன்கள் சீராக செயல்பட வேண்டும். உடலில் உள்ள ரசாயன கடத்திகளும் சீராக செயல்பட வேண்டும். மூளையின் தண்டுவடமும் பாதிப்பு இன்றி இருக்க வேண்டும். ஹார்மோன்களும் ரசாயன கடத்திகளும் சீராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். உலக ஆண்கள் தின வார விழாவையொட்டி காமராஜ் மருத்துவமனையில் இலவச பாலியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 3 ஆயிரம் தம்பதிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.