வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா
6/24/2019 3:07:40 PM
தண்டையார்பேட்டை: வடசென்னை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில், கருணாநிதியின் 96வது பிறந்தநாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே நடந்தது. இந்த கூட்டத்துக்கு, வழக்கறிஞரணி மாவட்ட அமைப்பாளர் மருதுகணேஷ் தலைமை வகித்தார். சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். தலைமைக்கழக பேச்சாளர் சூர்யா வெற்றிகொண்டான் பேசினார். இதில், 500 பெண்களுக்கு பிளாஸ்டிக் குடங்கள், 50 பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதற்கு, மாவட்ட துணை அமைப்பாளர் தேவபிரசாத் தலைமை வகித்தார். வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி முகாமை தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். இதில், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரூபசங்கர், சிவகுமார், உமாசங்கர் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.