புழல் 23வது வார்டில் கழிவுநீர், குப்பை தேக்கத்தால் தொற்றுநோய் பீதியில் மக்கள்
11/29/2018 2:50:33 PM
புழல்: சென்னை மாநகராட்சி 23வது வார்டு புழல் மேட்டுத் தெருவில் அங்கன்வாடி மையம் மற்றும் அதன் அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த அரசு பொது கிணறு உள்ளது. தற்போது இந்த கிணற்றை பயன்படுத்தாமல் விட்டுவிட்டதால் அந்த கிணற்றில் அப்பகுதி மக்கள், குப்பையை கொட்டி வருகின்றனர். குப்பை மலைபோல் குவிந்துள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை கடித்து வருகின்றது. இதன் காரணமாக மலேரியா, டெங்கு உள்பட பல காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கிணற்றை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால் மக்களுக்கு பல்வேறு உடல்உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள பைப்பில் குடிநீர் பிடிக்கும் பொதுமக்கள் சிரமத்துடன் குடிநீரை எடுத்து செல்கின்றனர். மேலும் மேட்டு தெரு, திருவள்ளுவர் தெரு, ஒற்றைவாடை தெருக்களில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேலாவது மக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?