பொதட்டூர்பேட்டையில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்
11/29/2018 2:49:38 PM
பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களிலும் நேற்று கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் நோய்களை தடுப்பதற்கான பல்வேறு அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவி தலைமையில், டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேரூராட்சி ஊழியர்கள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர்கள் உதயசூரியன், கணபதி, ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் குப்பன், ஜெய்சங்கர், சுகாதார ஆய்வாளர் சஞ்சீவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.