அண்ணா பல்கலை.யில் 120 அசிஸ்டென்ட்கள்
1/25/2016 2:24:57 PM
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. ஜூனியர் அசிஸ்டென்ட்: 45 இடங்கள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்ற ரீதியில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில டைப்பிங்கில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் Word Processing சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: பொதுப்பிரிவினர் 30க்குள்ளும், எம்பிசி/பிசி யினர் 32க்குள்ளும், எஸ்சி.,எஸ்டியினர் 35க்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில் முன்னாள் ராணுவத்தினருக்கும் அவர்கள் ராணுவத்தில் பணியில் இருந்த ஆண்டுகளுக்கு ஏற்பவும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் சார்ந்த பிரிவுகளுக்கேற்பவும் தளர்வு அளிக்கப்படும்.
2. ஆபீஸ் அசிஸ்டென்ட்: 75 இடங்கள். சம்பளம்: ரூ.4,800-10,000 மற்றும் தர ஊதியம் ரூ.1,300. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப்பிரிவினர் 35க்குள்ளும், பிசி/எம்பிசியினர் 40 வயதிற்குள்ளும், எஸ்சி.,எஸ்டியினர் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில் முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் ராணுவத்தில் பணியில் இருந்த ஆண்டுகளுக்கு ஏற்பவும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் சார்ந்த பிரிவுகளுக்கேற்பவும் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் முறையான
கல்வித்தகுதியை பெற்றிருப்பதோடு தங்களது படிப்பை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.750/-, எஸ்சி.,எஸ்டியினர் ரூ.500/- இதை Registrar, Anna University, Chennai என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
http:/www.annauniv.edu என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனுப்பவும். இத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்கள் மற்றும் இதர அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar, Anna University, CHENNAI- 600025.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.1.2016