இந்திய ராணுவத்தின் வாகன பிரிவில் 21 இடங்கள்
2/1/2016 2:30:11 PM
கொல்கத்தா பனகரில் ராணுவ வாகன பிரிவில் காலியாக உள்ள 21 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. டிரேட்ஸ்மேன் மேட்: 17 இடங்கள். தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.
2. டெய்லர்: 1 இடம். தகுதி: மெட்ரிகுலேசனுடன் டெய்லரிங் பாடத்தில் ஐடிஐ. தொழிலில் 3 வருட முன்அனுபவம் இருக்க வேண்டும்.
3. வெண்டார்: 1 இடம். தகுதி: மெட்ரிகுலேசனுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் 6 ஆண்டுகள் முன்அனுபவம்.
4. சமையல்காரர்: 1 இடம். தகுதி: மெட்ரிகுலேசனுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் முன்அனுபவம்.
5. பார்மசிஸ்ட்: 1 இடம். தகுதி: பிளஸ் 2 வுடன் பார்மசி பாடத்தில் இரண்டு ஆண்டு டிப்ளமோ மற்றும் மாநில பார்மசி கவுன்சிலில் பதிந்திருக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.02.2016.