போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் இரண்டாம் நிலை காவலருக்கான 6,140 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு
12/28/2017 3:26:14 PM
சென்னை: போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் இரண்டாம் நிலை காவலரில் 6,140 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 27 கடைசி நாள் ஆகும். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் 5,538 பணியிடங்கள்(ஆண்கள் 3877, பெண்கள் 1661), சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறைக்காவலர் 365 இடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை தீயணைப்போர் 237 இடங்கள் என 6140 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு இன்று முதல் இணையவழி மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய அடுத்த மாதம் 27ம் தேதி கடைசி நாள் ஆகும். அஞ்சலகங்கள் மூலம் கட்டணங்களை செலுத்த அடுத்த மாதம் 31ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு மார்ச், ஏப்ரலில் நடைபெறும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 18வயது நிறைவு செய்திருக்க வேண்டும். 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 வகுப்பில் தமிழிைழ ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் பணியில் சேர்ந்த இரண்டாண்டுக்குள் தேர்சச்சி பெற வேண்டும். எழுத்து தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். பொது அறிவில் இருந்து 50 மதிப்பெண்களும், உளவியலில் 30 மதிப்பெண்களுக்கும் வினாக்கள் கேட்கப்படும். வினாக்கள் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருக்கும். எழுத்து தேர்வில் குறைந்த பட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். உடல் திறன் ேபாட்டி 15 மதிப்பெண்களும், சிறப்பு மதிப்பெண்களுக்கு(என்.சி.சி., என்.எஸ், எஸ், விளையாட்டு சான்றிதழ் ) 5 மதிப்பெண் வழங்கப்படும். மேலும் விவரங்களை www.tnusrbonline.org தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.