மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணியிடம் தகுதியுள்ளவர்கள் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
2/16/2016 2:14:40 PM
சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட அறிக்கை:சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்(பொது), மாவட்ட இணை இயக்குனர்(வேலைவாய்ப்பு) அலுவலகம் மற்றும் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றில் தலா ஒரு காவலர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்துக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் ஆண்கள் விண்ணப்பிக்கலாம். முறையான பள்ளி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
1.1.2016 அன்று எஸ்சி, எஸ்சிஏ பிரிவினர் 35 வயதுக்கு மிகாமலும், பிசி, எம்பிசியினர் 32வயதுக்கும், ஓசி பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பணிக்கு ஓசி, பொது மற்றும் பொது முன்னுரிமையற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 56 ஜெயபிரகாஷ் நாராயணன் மாளிகை 2வது தளம், சாந்தோம் என்ற முகவரிக்கு வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.