மின்பகிர்மான கழகத்தில் பி.இ. படித்தவர்களுக்கு வேலை
2/9/2016 2:48:04 PM
மின்பகிர்மான கழகத்தில் (Power grid) எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய இன்ஜினியரிங் துறைகளில் காலியாக உள்ள 162 எக்சிக்யூட்டிவ் டிரெய்னீஸ் இடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Executive Trainees: 162 பணியிடங்கள்
1. எலக்ட்ரிக்கல் துறை : 138 பணியிடங்கள்.
2. எலக்ட்ரானிக்ஸ் துறை: 15 இடங்கள்.
3. சிவில் துறை: 6 இடங்கள்.
4. கம்ப்யூட்டர் சயின்ஸ்: 5 இடங்கள்.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் (பவர்)/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/பவர் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங்/பவர் இன்ஜினியரிங் (எலக்ட்ரிக்கல்)/எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன்/சிவில் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ இன்பர்மேசன் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் 65% மதிப்பெண்களுடன் பி.இ./பி.டெக் பட்டம் அல்லது 65% மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/சிவில்/கம்பயூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் ஏஎம்ஐஇ.
கேட்-2016 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கேட்-2016 தேர்வின் மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கேட்-2016 அட்மிட் அட்டை, அசல் மதிப்பெண் அட்டை, புகைப்பட அடையாள அட்டை, கல்வித்தகுதி சான்றிதழ்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கேட்-2016 பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள https://appsgate.iisc.ernet.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
தகுதியானவர்கள் www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது கேட் பதிவு எண்ணை ஆன்லைன் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.2.2016.