தேசிய அலுமினிய ஆலையில் வேலை பிளஸ் 2 / டிப்ளமோ படித்திருந்தால் போதும்
1/18/2016 2:47:20 PM
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒடிசாவில் உள்ள National Aluminium Company Limited ல் ஜூனியர் போர்மேன், மைனிங் மேட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Junior Foreman (Civil): 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.14,600-36,500. வயது: 1.1.2016 தேதிப்படி 40க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 2 வருட பணிஅனுபவம்.
2. Managing Mate: 10 இடங்கள். சம்பளம்: ரூ.11,700-27,500. வயது: 1.1.2016 தேதிப்படி 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன்
Mining Mate மற்றும் First Aid சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்றும் 2 வருட பணிஅனுபவம்.
அதிகபட்ச வயதுவரம்பில் ஒபிசியினருக்கு 3 வருடங்களும், எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
3. Junior Operative Trainee: 27 இடங்கள் சம்பளம்: ரூ.11,700-27,500. வயது: 1.1.2016 தேதிப்படி 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50/- இதை National Aluminium Company Limited, Alumina Refinery என்ற பெயரில் Damanjodi,
Odisha வில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி.,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி
களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
The Senior Manager (HRD), Recruitment Cell, Mines & Refinery Complex, www.nalcoindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி: National Aluminum Company Limited, Damanjodi, Koraput- 763008, ODISHA.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.1.2016.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 15.2.2016.