சணல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
1/11/2016 2:41:59 PM
கொல்கத்தாவில் உள்ள சணல் ஆராய்ச்சி நிலையத்தில் (Central Research Institute of Jute & Allied Fibres) 20 டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. Technical Assistant (T-3) (Laboratory Technician) 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-2). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. தகுதி: Agriculture அல்லது Agriculture சம்பந்தமான Science/Social Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம்.
2. Technical Assistant (T-3) (Field/Farm Technician) 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. தகுதி: Agriculture அல்லது Agriculture சம்பந்தமான Science/Social Science பாடத்தில் இளங்கலை.
3. Technical Assistant (T-3) (Library Assistant): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. தகுதி: Library Science/Library and Information Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம்.
4. Technical Assistant (T-3) (Farm Engineer) 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-
20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. தகுதி: Agriculture Engineering பாடப்பிரிவில் இளங்
கலை பட்டம் அல்லது 3 வருட டிப்ளமோ.
5. Technician (T-1) (Field/Farm Technician) : 8 இடங்கள் (பொது-5, எஸ்சி-2, பொது மாற்றுத்திறனாளி-1). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
6. Lower Division Clerk: 5 இடங்கள் (பொது-2,
எஸ்சி-1, ஒபிசி-2). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி.
வயது: மேற்குறிப்பிடப்பட்ட 5 பணிகளுக்கான வயது வரம்பு: 23.1.2016 தேதிப்படி 18 முதல் 30க்குள். வரிசை எண்: 6 பணிக்கு 18 வயதிலிருந்து 27க்குள். எஸ்சி.,எஸ்டி.,ஒபிசி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு அளிக்கப்படும்.
வரிசை எண் 1 முதல் 4 வரை உள்ள பணிகளுக்கு எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். வரிசை எண்: 5 பணிக்கு எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். வரிசை எண்: 6 பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: இதை ICAR-UNITCRIJAF என்ற பெயரில் கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும். பெண்கள், எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மாதிரி விண்ணப்பத்தை www.crijaf.org.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
ICAR- Central Research Institute for Jute & Allied Fibres,
Barrackpore,
Kolkata- 700120,
WESTBENGAL.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.1.2016.