மென்பொருள் தொழில் நுட்ப பூங்காவில் சயின்டிஸ்ட்
1/11/2016 2:40:43 PM
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Software Technology Parks of India வில் சயின்டிஸ்ட் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. Member Technical Staff (Scientist ‘D’): 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.15,600-39,100. வயது: 42க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ்/டெலி கம்யூனிகேசன்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ தகவல் தொழில்நுட்பம் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக்., அல்லது இயற்பியல்/ கணிதம்/புள்ளியியல்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ்/ பயன்பாட்டு எலக்ட்ரானிக்ஸ்/ தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் எம்.எஸ்சி., மற்றும் 10 வருடங்கள் பணி அனுபவம்.
2. Member Technical Staff (Scientist ‘C’): 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1). சம்பளம்: ரூ.15,600-39,100. வயது வரம்பு: 36 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ்/டெலி கம்யூனிகேசன்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக் பட்டம் அல்லது இயற்பியல்/கணிதம்/புள்ளியியல்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரானிக்ஸ்/பயன்பாட்டு எலக்ட்ரானிக்ஸ்/தகவல் தொழில்நுட்பம் பிரிவுகளில் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் எம்.எஸ்சி., அத்துடன் 10 வருடங்கள் பணிஅனுபவம்.
3. Member Technical Staff (Scientist ‘B’). 18 இடங்கள் (பொது-9, ஒபிசி-4, எஸ்சி-4, எஸ்டி-1). இவற்றில் 4 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சம்பளம்: ரூ.15,600-39,100. தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ்/டெலி கம்யூனிகேசன்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக் பட்டம் அல்லது இயற்பியல்/கணிதம்/புள்ளியியல்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரானிக்ஸ்/ பயன்பாட்டு எலக்ட்ரானிக்ஸ்/தகவல் தொழில்நுட்பம் பிரிவுகளில் முதல்வகுப்பு தேர்ச்சியுடன் எம்.எஸ்சி., மற்றும் 10 வருடங்கள் பணி அனுபவம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500/- இதை Software Technology Parks of India என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும். எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளி–்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் www.stpi.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
Chief Admn., Officer,
Software Technology Parks of India,
9th Floor, NDCC-II,
Jai Singh Marg, NEWDELHI- 110 001.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.1.2016.