விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் ஜூனியர் டிரெய்னி ஐடிஐ படித்த 366 பேருக்கு வாய்ப்பு
1/4/2016 2:18:06 PM
விசாகப்பட்டினத்தில் உள்ள Rashtriya Ispat Nigam Limited ஸ்டீல் ஆலையில் ஐடிஐ படித்த 366 பேர் ஜூனியர் டிரெய்னியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Junior Trainee. 366 இடங்கள் இவற்றில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 236 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு 110 இடங்களும், இன்ஸ்ட்ருமென்டேசனுக்கு 20 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொத்த காலியிடங்களில் 12 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சம்பளம்: ரூ.16,800-3%-24,110.
கல்வித்தகுதி:
அ. மெக்கானிக்கல் பிரிவுக்கு: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter, Machinist, Mill Wright, Turner, Draughtsman (Mechanical) டிரேடில் ஐடிஐ அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ.
ஆ. எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் டிரேடில் ஐடிஐ அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ.
இ. இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவுக்கு: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Instrument mechanic, Electronics டிரேடில் ஐடிஐ அல்லது Electronics & Communications, Instrumentation, Electronoics & Instrumentation Engineering பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவுகளுக்கு மட்டுமே பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துதேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.300/- இதை RINL Recruitment Account No: 30589461229 என்ற கணக்கில் ஏதேனும் ஒரு வங்கியில் கட்டணத்தை செலுத்தவும். செலானை சம்பந்தப்பட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
www.vizagsteel.com என்றஇணைய தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். கட்டணம் செலுத்த கடைசி நாள்: 15.1.2016.
தேர்வு நடைபெறும் நாள்: 1.2.2016.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.1.2016.