கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்
1/4/2016 2:17:42 PM
இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Stipendiary Trainee/Scientific Assistant (Health Physics): 4 இடங்கள் (எஸ்சி-1, ஒபிசி-1, பொது-2). சம்பளம்: ரூ.9,300-34,800. வயது வரம்பு: 15.2.2016 அன்று 18 முதல் 25க்குள். தகுதி: இயற்பியலை முக்கிய பாடமாகக் கொண்டு 60% மதிப்பெண்களுடன் பி.எஸ்சி.,. இதில் வேதியியல்/கணிதம்/புள்ளியியல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களை துணைப் பாடமாக படித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 18 மாதங்கள். பயிற்சியின் போது ஊக்கத்தொகை வழங்கப்படும். உடற்தகுதி: விண்ணப்பதாரர்கள் 160 செ.மீ., உயரமும், 45.5 கிலோ எடையும் கொண்டிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.npcil.nic.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டர் டைப்பிங்கில் அதே வடிவமைப்பில் அடித்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Manager (HR), HRM Sectiion, Nuclear Power Corporation of India Limited, Madras Atomic Power Station, Kalpakkam- 603 102, Kancheepuram District, Tamilnadu.
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.2.2016.