தேசிய விதை உற்பத்தி நிறுவனத்தில் டிரைவர்
1/4/2016 2:17:17 PM
ராஜஸ்தானில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய விதை கழகத்தில் 32 டிரைவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிராக்டர் மற்றும் டிராலி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Trainee- Tractor Driver: பயிற்சி காலம்- ஒரு வருடம். 32 இடங்கள் (பொது-17, ஒபிசி-10, எஸ்சி-3, எஸ்டி-2). சம்பளம்: ரூ.7,000-19,700. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று டிராக்டர் மற்றும் டிராலி ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். Combine, JCB, Bulldozer, Tractor with Trolley/Agriculture Implements/Land Leveller ஆகியவற்றில் ஓட்டுநராக அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.14,553.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500. இதை National Seeds Corporation Limited என்ற பெயரில் Suratgarhல் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும். எஸ்சி.,எஸ்டியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மாதிரி விண்ணப்பத்தை www.indiaseeds.comஎன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அத்துடன் டிடி மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் அனுப்பவும். தபால் அல்லது கூரியர் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Head of Farm, Central State Farm,
Suratgarh- 335 804, Sriganganagar, Rajasthan.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.1.2016.