மத்திய அரசின் பத்திர அச்சகம் மற்றும் நாணய உற்பத்தி ஆலையில் வேலை
12/28/2015 2:28:31 PM
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதாரத்துறையின் கீழ் இயங்கும் பத்திரம் அச்சகம் மற்றும் நாணய கழகத்தின் கிளை நிறுவனமான மும்பையில் உள்ள இந்திய பத்திர அச்சகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. Assistant Assay Superintendent: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.12,300-25,400 மற்றும் இதர படிகள். தகுதி: செயற்கை வேதியியல் பாடத்தில் இரண்டாம் நிலை தேர்ச்சியில் முதுநிலை பட்டம் மற்றும் ஆய்வுப் பணியில் 2 ஆண்டுகள் முன்அனுபவம். வயது: 30.11.2015 அன்று 18 முதல் 30க்குள்.
2. Supervisior (Technical): 5 இடங்கள். (ஒபிசி-1, எஸ்சி-1, பொது-3). சம்பளம்:ரூ.12,300-25,400 மற்றும் இதரபடிகள். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/மெட்டலர்ஜி/ டூல் மற்றும் டை டிசைன் ஆகிய பாடங்களில் 60% தேர்ச்சியுடன் டிப்ளமோ. வயது: 30.11.2015 அன்று 18 முதல் 30க்குள்.
3. Junior Hindi Translator: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.12,300-25,400 மற்றும் இதரபடிகள். தகுதி: பட்டப்படிப்பு ஆங்கிலம் அல்லது இந்தியை ஒரு பாடமாகக் கொண்டு இந்தி அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம் மற்றும் இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும் மொழிபெயர்க்கும் திறனில் ஓராண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது:30.11.2015 அன்று 18 முதல் 30க்குள்.
4. Secretarial Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: 55% தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டத்துடன் கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், அதை டைப்பிங்கில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும் டைப் செய்யும் வேகம் பெற்றிருக்க வேண்டும். வயது: 30.11.2015 அன்று 18 முதல் 30க்குள்.
5. Laboratory Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. தகுதி: 55% தேர்ச்சியுடன் வேதியியல் பாடத்தில் பி.எஸ்சி., மற்றும் வேதியியல் ஆய்வகத்தில் அல்லது ஆராய்ச்சி மேம்பாடு நிறுவனத்தில் பணியாற்றிய முன்அனுபவம். வயது: 30.11.2015 அன்று 18 முதல் 30க்குள்.விண்ணப்பதாரர்கள் www.igmmumbai.spmcil.comஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2015.