கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உதவியாளர்
12/28/2015 2:28:03 PM
இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் இயங்கும் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. Scientific Assistant (Health Physics): 4 இடங்கள் (PWD-HH). பயிற்சி கால அளவு: 18 மாதங்கள். பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.9,300. பயிற்சி முடித்தபின் வழங்கப்படும் சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயதுவரம்பு: 19.1.2016 அன்று 18 முதல் 25க்குள். தகுதி: கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தை முக்கிய பாடமாக படித்து 60% மதிப்பெண்களுடன் பி.எஸ்சி.,
2. Assistant Grade I (Finance & Accounts): 3 இடங்கள் (VH-2, HH-1).
3. Assistant Grade I (Human Resources): 2 இடங்கள் (HH)
மேற்குறிப்பிடப்பட்ட பணிகளுக்கான சம்பள விகிதம், வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி விவரம்: சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. வயது: 19.1.2016 தேதிப்படி 21 முதல் 30க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் பி.எஸ்சி.,/பி.காம்.,/பி.ஏ. பட்டம். Finance & Accounts, Commerce பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கிலத்தில் வேகமாக டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தி டைப்பிங் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எம்.எஸ். ஆபீசில் 6 மாத பயிற்சி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேசன் டெக்னாலஜி படித்தவர்களுக்கு பயிற்சி தேவையில்லை.
கூடங்குளம் அணுமின்திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு 2 மற்றும் 3 பணிகளுக்கான கல்வித்தகுதி விவரம்:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப்பட்டம் பெற்று கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் வேகமாக டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தி டைப்பிங்கில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
Scientific Assistant பணிக்கான உடல் தகுதி: உயரம்- 160 செ.மீ., எடை- 45.5 கிேலா. சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு எழுத்துதேர்வு, நேர்முகத்தேர்வும், மற்ற பணிகளுக்கு எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டரில் டைப்பிங் தேர்வு, கம்ப்யூட்டர் செயல்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.npcil.nic.in என்ற இணையதளம் மூலம் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவர்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Deputy Manager (HRM), Recruitment Section, Kudankulam Post, Radhapuram Taluk, Tiurnelveli District, Tamilnadu.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.1.2016.