நெய்வேலி நிலக்கரி கழகத்தில் 100 காலியிடங்கள் பி.இ.,/பி.டெக் படித்தவர்களுக்கு வாய்ப்பு
12/21/2015 2:14:22 PM
நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தில் பல்வேறு துறைகளில் 100 பேர் நிர்வாக இன்ஜினியர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பி.இ.,/பி.டெக்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. Executive Trainee (Mechanical): 50 இடங்கள் (பொது-27, ஒபிசி-13, எஸ்சி-7, எஸ்டி-3). தகுதி: பொதுப்பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும், எஸ்சி.,எஸ்டி.,ஒபிசியினர் 50% மதிப்பெண்களுடனும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., படித்திருக்க வேண்டும்.
2. Executive Trainee (Electrical): 15 இடங்கள் (பொது-8, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1). தகுதி: பொதுப்பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும், எஸ்சி.,எஸ்டி.,ஒபிசியினர் 50% மதிப்பெண்களுடனும் எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,
3. Executive Trainee (Electrical): 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, எஸ்சி-1). தகுதி: பொதுப்பிரிவினர்கள் 60% மதிப்பெண்களுடனும், எஸ்சி/எஸ்டி/ஒபிசியினர் 50% மதிப்பெண்களுடனும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,
4. Executive Trainee (Civil): 10 இடங்கள் (பொது-8, எஸ்சி-2). தகுதி: பொதுப்பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும், எஸ்சி.,எஸ்டி மற்றும் ஒபிசியினர் 50% மதிப்
பெண்களுடனும் சிவில்/சிவி் மற்றும் ஸ்ட்ரெக்சுரல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,
5. Executive Trainee (Control & Instrumentation): 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1). தகுதி: பொதுபிரிவினர்கள் 60% மதிப்பெண்களுடனும், எஸ்சி.,எஸ்டி.,ஒபிசியினர் 50% மதிப்பெண்களுடனும் Instrumentation/Electronics & Instrumentation/Instrumentation and Control Engineering பாடத்தில் பி.இ.,
6. Executive Trainee (Mining): 10 இடங்கள் (பொது-4, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1). தகுதி: பொது பிரிவினர்கள் 60% மதிப்பெண்களுடனும், எஸ்சி.,எஸ்டி ஒபிசியினர் 50% மதிப்பெண்களுடனும் Mining Engineering பாடத்தில் பி.இ.,/பி.டெக்/பிஎஸ்சி பட்டம்
7. Executive Trainee (Computer): 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1) தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ இன்பர்மேசன் டெக்னாலஜி பாடப்பிரிவில் பி.இ., அல்லது பொதுப்பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும், எஸ்சி.,எஸ்டி., ஒபிசியினர் 50% மதிப்பெண்களுடனும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பாடப்பிரிவில் முதுநிலை பட்டம்.
மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பணிகளுக்கும் சம்பளம்: ரூ.20,600-46,500. வயது வரம்பு: 1.12.2015 தேதிப்படி 30க்குள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.300/- இதை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. கட்டணம் செலுத்துவது குறித்து இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கேட்-2016 தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager (HR), Recruitment Cell, Human Resource Department, Neyveli Lignite Corporation Limited, Corporate Office, Block-1, NEYVELI- 607 801.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.1.2016.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 29.1.2016.