ராணுவ டெக்னிக்கல் பிரிவில் 91 இடங்கள் பி.இ., பிடெக் படித்திருந்தால் போதும்
12/21/2015 2:14:01 PM
இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் (SSC Technical) காலியாக உள்ள 91 இன்ஜினியர் பணிகளுக்கு பி.இ. படித்த ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அ. Engineer (ஆண்கள் மட்டும்) (SSC Technical-47th Short Service Commission).
1. சிவில்-25 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங்/சிவில் ஸ்டெரக்சுரல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.
2. மெக்கானிக்கல்-15 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல்/ மெகாடிரானிக்ஸ் பாடத்தில் பி.இ.,/பிடெக்.,
3. ஆட்டோமொபைல் மற்றும் வொர்க்ஷாப் டெக்னாலஜி-2. தகுதி: ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,
4. ஏரோநாட்டிக்கல்/ஏவியேஷன்/ஏரோஸ்பேஸ்/பாலிஸ்டிக்ஸ்/ஏவியோனிக்ஸ்-2 இடங்கள். தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்
5. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ஐடி- 10 இடங்கள். தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்.,
6. எலக்ட்ரானிக்ஸ்/டெலி கம்யூனிகேசன்ஸ்/ சேட்டிலைட் கம்யூனிகேசன்ஸ்- 15 இடங்கள். தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்.,
7. எலக்ட்ரானிக்ஸ்/ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ்/மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ்: 7 இடங்கள். தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்.,
8. ஃபுட் டெக்னீசியன்/பயோ டெக்னீசியன்: 3 இடங்கள். தகுதி: பயோ டெக்னாலஜி பாடத்தில் பி.டெக்.,
9. பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்: 2 இடங்கள். தகுதி: மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,
ஆ. Engineer (பெண்கள் மட்டும்). (SSC Technical-18th Short Service Commission). காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பாடப் பிரிவுகள் விவரம்: சிவில்-4, மெக்கானிக்கல்-2, எலக்ட்ரிக்கல்-2, டெலிகம்யூனிகேசன்-2. தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., சம்பளம்: ரூ.15,600-39,100. வயது வரம்பு: 20 முதல் 27க்குள்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் பயிற்சியளிக்கப்படும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.1.2016.