பிலாய் ஸ்டீல் ஆலையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை
11/30/2015 2:16:36 PM
மத்திய அரசுக்கு சொந்தமான பிலாய் ஸ்டீல் ஆலையில் சர்வேயர், மைனிங் மேட் உள்ளிட்ட 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. சர்வேயர்: 3 இடங்கள் (பொது-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.16,800-3%-24,110. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதனுடன் Mining and Mine‘s Survey பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி. ஒரு வருட அனுபவம். சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. மைனிங் மேட்: 12 இடங்கள் (பொது-7, எஸ்டி-4, முன்னாள் ராணுவத்தினர்-1). சம்பளம்: ரூ.15,830-3%-22,150. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதனுடன் Mining Mate சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
3. பிளாஸ்டர்: 3 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.15,830-3%-22,150. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளாஸ்டர் சான்றிதழ் அல்லது மைனிங் மேட் சான்றிதழோடு ஒரு வருட பணி அனுபவம்.
வயது: 18 லிருந்து 28க்குள்.
உடல் தகுதி: உயரம்: 155 செ.மீ., எடை: 45 கிலோ. மார்பளவு: 75 செ.மீ., விரிவடைந்த நிலையில்: 79 செ.மீ., எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.12.2015.