கொச்சி விமான நிலையத்தில் வேலை டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு
11/30/2015 2:16:13 PM
கொச்சியில் உள்ள Cochin International Airport Limited ல் உள்ள காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: 1. Junior Assistant Grade III Trainee: 11 இடங்கள். சம்பளம்: ரூ.8,750-3%-15,800. வயது: 5.12.2015 தேதிப்படி 25க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய பாடப்பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி. கனராக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருடங்களுக்குள் இருக்க வேண்டும். உடல் தகுதி: உயரம்: 165 செ.மீ. எடை: 55 கிலோ. மார்பளவு: 81 செ.மீ., தெளிவான பார்வை மற்றும் ஆரோக்கியமான உடல் பெற்றிருக்க வேண்டும்.
2. Junior Attendant Grade V Trainee: 10 இடங்கள். சம்பளம்: ரூ.4,750-3%-7,000.
வயது: 5.12.2015 அன்று 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருடத்திற்குள் இருக்க வேண்டும். உடல் தகுதி: 160 செ.மீ. எடை: 52 கிலோ. மார்பளவு: 81 செ.மீ., தெளிவான பார்வை மற்றும் ஆரோக்கியமான உடலை பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி/ எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தகுதியானவர்கள் www.cialaero.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.12.2015.