தெலங்கானா அரசை கண்டித்து டெல்லியில் ஒய்.எஸ்.சர்மிளா ஆர்ப்பாட்டம்
3/14/2023 6:47:25 PM
புதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தில் ‘காளேஸ்வரம்’ என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு, ஆயிரக்கணக்கான கோடி கமிஷன் வசூல் செய்ததாக ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் தெலங்கானா முதல்வரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காளேஸ்வரம் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதால், சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் தெலங்கானா முதல்வருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை டெல்லி போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் ஜந்தர் மந்தரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.