உலகில் 80 கோடி பேருக்கு சிறுநீரக கோளாறு
3/10/2023 6:08:31 PM
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநில மருத்துவக் கல்லூரியில் உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது கல்லூரியின் சிறுநீரகவியல் பிரிவு தலைவர் டாக்டர் பிஸ்வரஞ்சன் மொகந்தி கூறுகையில், ‘உலகளவில் 80 கோடி பேர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரு லட்சம் பேரில் 80 பேருக்கு சிறுநீரக பிரச்னை உள்ளது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் மிகவும் தாமதமாகவே சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமடைகிறது. முன்கூட்டியே கண்காணித்து சிகிச்சை பெற்றால் அதில் இருந்து மீள முடியும்’ என்றார்.