சிபிஐ விசாரணைக்கு மத்தியில் அப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால்..!: கிட்னி கொடுத்த லாலு மகள் ஆவேசம்
3/8/2023 6:41:24 PM
சிங்கப்பூர்: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தலைவருமான லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி மற்றும் அவர்களது மகன், மகள்கள் மீது ரயில்வே நிலம் - வேலை தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இவ்வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக லாலு பிரசாத் யாதவ், மனைவி ரப்ரி உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத்தின் இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யா வெளியிட்ட பதிவில்,
‘எனது தந்தைக்கு ஏதாவது நேர்ந்தால் யாரையும் சும்மா விடமாட்டேன். எனது தந்தையை துன்புறுத்தப்படும் விதம் சரியில்லை. அவரை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள். காலம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 74 வயதான அவரை தொடர்ந்து தொந்தரவு செய்தால், டெல்லியின் அதிகாரத்தை அசைக்க முடியும். சகிப்புத்தன்மையின் வரம்புகள் இப்போது சோதிக்கப்படுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர்தான் லாலுவுக்கு சிறுநீரக தானம் கொடுத்த மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.