இந்தியா, அமெரிக்காவை போல் கனடாவில் ‘டிக்டாக்’கிற்கு தடை
2/28/2023 5:46:34 PM
ஒட்டாவா: இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் டிக்டாக்கிற்கு தடை செய்யப்பட்டது போன்று, கனடாவிலும் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் கடுமையாக மோசமடைந்து வருகிறது. இந்நிலையில் கனடா தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சீன நிறுவனமான பைட் டான்ஸின், ‘டிக்டாக்’ செயலிக்கு தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வகையான தொலைபேசிகள் மற்றும் பிற சாதனங்களிலும் பயன்படுத்த தடை செய்யப்படுகிறது.
அரசால் வழங்கப்பட்ட செல்போன் சாதனங்களிலிருந்து டிக்டாக் பயன்பாடு அகற்றப்படும். தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு டிக்டாக் ஆபத்தை ஏற்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் டிக்டாக்கிற்கு தடை விதித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.