அண்ணாமலை உருவ படம் எரித்த அதிமுகவினர் 30 பேர் கைது
3/9/2023 6:37:31 PM
திருச்சி: தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த ஐ.டி விங் தலைவர்கள் தொடர்ச்சியாக அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர். இது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவினர் இடையே ‘பனிப்போர்’ உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், பாஜ தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தன்னை ஒப்பிட்டு பேசியது அதிமுகவினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடை வீதியில் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவி தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று காலை திரண்டனர். அவர்கள் பாஜ தலைவர் அண்ணாமலை ஒழிக என கோஷமிட்டு திடீரென, அண்ணாமலையின் உருவப்படத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மீன்சுருட்டி போலீசார் ரவி உள்பட 30 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். அங்க பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக-பாஜக கூட்டணி நீடித்து வரும் நிலையில், அரியலூரில் அண்ணாமலை உருவப்படத்தை அதிமுகவினர் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.