4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 73 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை: தி.மலை போக்சோ கோர்ட் தீர்ப்பு
3/8/2023 7:23:05 PM
திருவண்ணாமலை: சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 73 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (73). இதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, இவரது வீட்டுக்கு அருகே கடந்த 4.5.2020 அன்று விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அந்த சிறுமியை வீட்டுக்குள் அழைத்து சென்ற சுகுமார், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி, அழுதபடியே சென்று பெற்றோரிடம் தெரிவித்தார்.
புகாரின்பேரில் ஆரணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சுகுமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, திருவண்ணாமலையில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி பார்த்தசாரதி விசாரித்து, சுகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதைத்தொடர்ந்து, சுகுமாரை போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.