இந்திரா பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை
6/14/2013 1:56:44 PM
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பாண்டூர் இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பி.இ., பி.டெக்., இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. இந்திரா கல்விக் குழுமங்களின் தலைவர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி, 42 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.
கல்லூரி நிர்வாக அறங்காவலர் இந்திரா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் பிரபாகரன் வரவேற்றார். டிவிஎஸ் பிரேக் லைனிங், யுரேகா ஃபோர்ஸ், லிண்டா சாய், சிஎஸ்எஸ் கார்ப், ஐஎன்ஜி வைஸ்யா பேங்க் ஆகிய நிறுவனங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விழா முடிவில் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் ராம்குமார் நன்றி கூறினார்.