வேளாண் பட்ட படிப்புகள் ஜூலை 1 முதல் கவுன்சலிங்
6/7/2013 1:08:01 PM
கோவை: வேளாண் இளநிலை பட்ட வகுப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஜுன் 17ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ஜுலை 1 முதல் கவுன்சலிங் துவங்குகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு, இணைப்பு கல்லூரிகளில், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், மனையியல், பட்டுவளர்ப்பு, வேளாண்மை பொறியியல், உயிர்தொழில்நுட்பம், வேளாண்மை தகவல் தொழில்நுட்பம், உயிர் தகவலியல் போன்ற இளநிலை பட்டப்படிப்புகள் கற்று தரப்படுகின்றன.
வேளாண் படிப்புகளில் இந்தாண்டு 10 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 1330 இடங்கள் உள்ளன. கடந்த மே 6ம் தேதி முதல் இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டது. விண்ணப்பத்தை அனுப்ப காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது. ஜூன் 17ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, ஜுலை 1 முதல் 8 வரை கலந்தாய்வு நடக்கிறது.