கிளைமேட்டாலஜிஸ்ட் ஆக விருப்பமா?
2/15/2012 1:39:02 PM
பணிவாய்ப்புக்காக மட்டுமின்றி ஆர்வத்தை தூண்டும் வகையிலான படிப்புகளும் உள்ளன. இதில் வானியல், புவியியல், அஸ்ட்ராலஜி, வனம் சார்ந்த படிப்புகள், சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகள் வரிசையில் இடத்துக்கு இடம் மாறுபடும் தட்பவெப்பநிலையை அறியும் கிளைமேட் சயின்ஸ் படிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தட்பவெப்ப நிலை, அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய் பவர்களே கிளைமேட்டாலஜிஸ்ட்கள். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இவர்கள் கணிக்கின்றனர். இதில் குறுகிய கால மாற்றங்கள் குறித்து அறிவிப்பவர்களை மெட்டராலஜிஸ்ட் என்கின்றனர். இது கிளைமேட்டாலஜியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இடத்துக்கு ஏற்றபடி வெப்பநிலை மாறுபடுகிறது. வெப்பநிலையும், சுற்றுச்சூழலுமே அங்கிருக்கும் விலங்குகளையும், தாவர வகைகளையும் தீர்மானிக்கின்றன. இது குறித்து ஆய்வு செய்யும் சுவாரஸ்யமான துறையே கிளைமேட்டாலஜி. வெப்பநிலை குறித்து நீண்ட கால ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் குறிப்பிட்ட ஒரு பகுதியின் தானிய உற்பத்தி, எரிபொருள் பயன்பாடு, அங்கு வசிக்கும் மனிதர்களின் உடல் நிலை, அழிவில் இருக்கும் விலங்குகள் குறித்து முன்கூட்டியே கிளைமேட்டாலஜிஸ்ட் தெரிவிக்க முடியும்.
இதை படிக்க விரும்புபவர்கள் இளநிலை படிப்பில் ஏதாவது இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலையில் பிசிக்கல் சயின்ஸ் முடித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுனத்தில் எம்.டெக். கிளைமேட் சயின்ஸ் என்ற படிப்பு வழங்கப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். இதில் தேர்வானவர்களுக்கு ஆப்டிடியூட் டெஸ்ட் மற்றும் இன்டர்வியூ மூலமாக அட்மிஷன் வழங்கப்படும். இப்படிப்பை முடித்தவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதுதவிர இந்தியப் பருவ நிலைக்கான இந்திய கல்வி நிறுவனம் (Indian Institute of Indian Meteorology) MS, M.Sc, M.Tech, ME, BE, B.Tech ஆகிய படிப்புகளில் முதல்நிலை மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் சிஷிமிஸி ழிணிஜி, நிகிஜிணி ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக சிகிஜிணிஷிஷிசி என்ற உள்ளீட்டு பயிற்சியை வழங்குகிறது.
படிப்பின் காலஅளவு மொத்தம் 18 மாதங்கள். 20 மாணவர்களுக்கு பருவநிலை அறிவியல் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டு, அதன் முடிவில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்Earth system sciences organisation-¡ சட்டப்பூர்வ நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக பணியமர்த்தப்படுவார்கள். மேலும், அவர்கள் பிஎச்டி படிப்பையும் மேற்கொள்ளலாம். மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுவதுடன் வருடத்திற்கு ரூ.1000 ஊதிய உயர்வும் வழங்கப்படும். இப்படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.15. இப்பயிற்சி திட்டங்கள் வரும் ஜூலை முதல் துவங்குகின்றன. மேலும் விவரங்களை இந்திய பருவநிலை நிறுவனத்தின் இணையதளத்தில் அறியலாம்.