வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி படிப்பு
2/15/2012 1:38:38 PM
மருத்துவப்படிப்புகளில் எண்ணற்ற வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி படிப்பு. எலக்ட்ரோ டயக்னாஸ்டிக் முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி கற்றுத் தரு கிறது. நியூரோ எலக்ட்ரோ பிசியோ டெக்னாலஜிஸ்ட், நியூராலஜி துறையில் முக்கிய பங்காற்றுவார்.படிக்கும் போதே பயிற்சி வகுப்புகளில் நோயாளி களை பரிசோதிக்கும் முறை பற்றி மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். இஇஜி லேப்களில் ரிப்போர்ட் தயாரிப்பது குறித்தும், அவசர காலத்தில் முதலுதவி செய்வது குறித்தும் படிக்கின்றனர். நியூரோ பிசியாலஜி லேப்களில் எலக்ட்ரோமையோகிராபி மற்றும் இதர நரம்பியல் சோதனைகளின் போது டாக்டர்களுக்கு உதவுவதே இவர்களது முக்கிய பணி.
விஷுவல் எவோக்ட் பொடன்ஷியல், சொமேட்டோசென்சரி எவோக்ட் பொடன்ஷியல், பிரைன்ஸ் டெம் ஆடிட்டரி எவோக்ட் ரெஸ்பான்ஸ் குறித்து படிப்பது மட்டுமல்லாமல், அவை குறித்த தொழில்நுட்ப ரீதியான அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ள இப்படிப்பு உதவுகிறது. இது தவிர தூக்கம் தொடர்பான பிரச்னைகள் குறித்து சோதனை நடத்த, பாலிசோம்னாகிராபி குறித் தும், லேப்களில் நோய் கூறுகள் பற்றி தொழில்நுட்ப சோதனை நடத்துவது குறித் தும் இதில் படிக்கலாம்.நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி படிக்க, பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இயற்பியல் படித்தவர்களுக்கு, முன்னுரிமை வழங்கப் படும். இப்படிப்பு முடித்தவர்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள மருத்துவமனைகளில் நல்ல ஊதியத்தில் நியூரோ டெக்னாலஜிஸ்ட்டாக வேலைக்கு சேரலாம். அல்லது இதே துறையில் விரிவுரையாளராகவோ, ஆராய்ச்சியாளராகவோ பணியாற்றவும் முடியும்.