பனாரஸ் பல்கலை.யில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்
2/8/2012 4:08:45 PM
தமிழகத்தில் பிளஸ்2 படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களின் முதற்கனவு எம்பிபிஎஸ் படிப்பு. கட்ஆப் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடப்பதால் பல ருக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழகத்தில் பிளஸ்2 தேர்வுகள் நெருங்கி வருகிறது. மருத்துவ படிப்புக்கான முன்தயாரிப்புகளில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டு உள்ளனர். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபார்ம், பிஏஎம்எஸ் படிப்புகளுக்கு 2012ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிளஸ்2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருத்தல் அவசியம். மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை உண்டு. அகில இந்திய தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தகுதித்தேர்வு 2 கட்டங்களாகவும், பிஏஎம்எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தகுதித் தேர்வு ஒரே கட்டமாகவும் நடைபெறும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மே 16ம் தேதி, பிஏஎம்எஸ், பிபார்ம் படிப்புகளுக்கு ஜூன் 17ம் தேதி தகுதித்தேர்வு நடைபெற உள்ளது.
விண்ணப்பக்கட்டணமாக ரூ.1600ஐ (எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கு ரூ.1100) ‘The Director, Institute of Medical Sciences, BHU, Varanasi‘ என்ற பெயரில் டிடியாக செலுத்த வேண்டும். டிடியின் பின்புறம் மாணவரின் பெயர், முகவரியை குறிப்பிட வேண்டும். ‘The Director, (PMT Cell), Institute of Medical Sciences, Banaras Hindu University, Varanasi221005‘ என்ற முகவரிக்கு அனுப்பி வரும் 27ம் தேதிக்குள் தபாலில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங் களை மார்ச் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை www.bhu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.