பிஎஸ்சி படிப்பவர்களுக்கு பெங்களூரில் உதவி தொகையுடன் கோடை கால ஆராய்ச்சி படிப்பு
2/8/2012 4:07:21 PM
உலகளவில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கல்லூரி மாணவர்களிடையே ஆராய்ச்சி படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனடிப்படையில் பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு சென்டர் பார் அட்வான்ஸ்டு சயின்டிபிக் ரிசர்ச் மையத்தில் கோடைகால அறிவியல் ஆராய்ச்சி படிப்பு கள் நடத்தப்படுகின்றன.
* Project Oriented Chemical Education (POCE) என்ற படிப்பில் சேர இயற்பியல், வேதியியல், கணிதம் சார்ந்த பிஎஸ்சி படிப்பில் முதலாம் ஆண்டு படிக் கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். படிப்பின் காலம் 6 முதல் 8 வாரங்கள் வரை.
* Project Oriented Biological Education (POBE) என்ற படிப்பில் சேர உயிரியலை ஒரு பாடமாக கொண்டு பிஎஸ்சிபடிப் பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். படிப்பின் காலம் 6 முதல் 8 வாரங்கள் வரை. அறிவியலில் புதிய கண்டு பிடிப்புகளை இலக்காக கொண் டுள்ள மாணவர்களுக்கு இப் படிப்புகளின் மூலம் விரிவுரை கள், ஆராய்ச்சி பணிகள் வழங்கப் படுகின்றன. முதலாம் ஆண்டு இப்படிப்பில் சேரும் மாணவர் கள் பின்னர் தொடர்ந்து 3 வருடங்களின் கோடை காலங்களில் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் இந்த மையத்தில் தங்கி ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வேதியியல் மற்றும்
உயிரி யல் பாடங்களில் டிப்ளமோ சான்றிதழ் பெற முடியும்.
மேலும் இந்த படிப்புகளை நல்ல முறையில் முடிப்பவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் நேரடியாக எம்எஸ், பிஎச்டி படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். www.jncasr.ac.in/fe என்ற இணையதளத்தில் வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம் அல்லது சுயமுக வரியிட்ட கவரை அனுப்பி வரும் பிப்.16க்குள் விண்ணப்பத்தை தபால் மூலம் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘The Assistant Coordinator, Fellowships - Extension Programmes, Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research, Jakkur Post, Banglore 560064‘ என்ற முகவரிக்கு வரும் மார்ச் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதர விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.