பலாத்கார படத்துக்கு சான்றிதழ் மறுப்பதா? தணிக்கை சட்டம் மீது ரவீணா தாக்கு
4/19/2017 3:40:49 PM
ஆளவந்தான், சாது படங்களில் நடித்தவர் ரவீணா டான்டண். இந்தியில் மதர் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படம் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. பெண் பலாத்கார பிரச்னையைபற்றி இப்படம் பேசுகிறது. ஆனால் படத்திற்கு சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்துவிட்டது. இந்த முடிவு ரவீணாவை அப்செட் ஆக்கியிருக்கிறது. இதுபற்றி அவர் கூறும்போது,’தணிக்கை குழு விதிகள் பழங்காலத்தில் உருவாக்கப்பட்டவை. தற்கால மாறுதலுக்கு ஏற்ப அவைகளை திருத்தி அமைக்க வேண்டும். மதர் படத்தின் கதையில் எந்த சுவையூட்டு வேலைகளும் செய்யாமல் நேரடியாக கருத்தை சொல்ல அனுமதிக்க வேண்டும். உண்மையை வெட்டவெளிச்சமாக காட்ட மறுத்தால் பலாத்காரத்தின் கொடுமை என்ன என்பதை ரசிகர்கள் அறிந்துகொள்ள முடியாது. தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்’ என்றார்.