மெட்ரோ வாட்டர் படத்துக்கு அதிகாரிகள் கெடுபிடி
4/18/2017 4:53:11 PM
மெட்ரோ வாட்டர் பற்றிய கதையாக உருவாகிறது ‘நகர்வலம்’.இதுபற்றி இயக்குனர் மார்க்ஸ் கூறியது: ஹவுஸிங் போர்ட் பகுதி மக்களுக்கு மெட்ரோ வாட்டர் சப்ளை செய்யும் லாரி டிரைவருக்கும், ஹவுஸிங் போர்ட் பெண்ணுக்கும் இடையேயான காதல்தான் கதை. காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்த பாலாஜி ஹீரோ. தீக்ஷிதா ஹீரோயின். தண்ணீர் லாரி டிரைவராக நடிக்க பாலாஜி பயிற்சி பெற்றார். இதற்காக மெட்ரோ வாட்டர் லாரி டிரைவர் ஒருவர் பயிற்சி அளித்தார். சென்னையில் 25 நாட்கள் மெட்ரோ வாட்டர் நிரப்பிய லாரிகளுடன் பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்புக்கு பயன்பட்டதுபோக மீதமுள்ள தண்ணீர் அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மெட்ரோ வாட்டர் கதை என்பதால் இதற்கு அனுமதி கொடுப்பதில் அதிகாரிகள் கெடுபிடி காட்டினார்கள். படத்தின் முழு ஸ்கிரிப்ட்டும் எழுதி வாங்கிக்கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதித்தனர். யோகி பாபு, பாலசரவணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பசுபதி குத்தாட்டம் ஆடியிருக்கிறார். எம்.நடராஜன் தயாரிப்பு. தமிழ் தென்றல் ஒளிப்பதிவு. பவன் கார்த்திக் இசை. இவ்வாறு இயக்குனர் கூறினார்.